திங்கள், 15 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1200


திருக்குறள் -சிறப்புரை :1200

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சே. ----00

நெஞ்சே நீ வாழ்க…! உன்னோடு அன்பு பாராட்டாத தலைவர்க்கு, அவர் பிரிவால் உனக்கு உற்ற வருத்தத்தை உரைக்க நினைக்கின்றாய்,அஃது இயலுமோ, அதைவிட, உனக்குத் துன்பம் உணர்த்தும் கடலைத் தூர்ப்பது எளிது.

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணலாகப்
 புறங்காலின் போக இறைப்பேன் முயலின்
அறம் புணையாகலும் உண்டு.” ----கலித்தொகை.

மிக்கு வருகின்ற கடல் தெய்வமே….! என்னைப் பேணிப் பாதுகாக்காமல் பிரிந்து சென்றவனை, யான் தேடிக் காணுமிடத்தே, நீ கொண்டுவந்து விட்டுவிடுக ; விடாயாயின், கடலே…!  நின் நீர் சூழ்ந்த இடமெல்லாம் வெறும் மணலாகும்படி, என் புறங்காலாலே நின்னுடைய நீரெல்லாம் போகும்படி இறைப்பேன் ; அது முடியுமோ எனின், முயன்றால் அதற்கு அறக் கடவுள் உதவியாதலும் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக