திருக்குறள்
-சிறப்புரை
:1183
சாயலும்
நாணும்
அவர்கொண்டார்
கைம்மாறா
நோயும்
பசலையும்
தந்து. --- ௧௧௮௩
என்னுடைய காதலர், இளமைநலன்
பொருந்திய, எனது மேனி
அழகையும் நாணத்தையும் எடுத்துக்கொண்டு, கைம்மாறாகக் காமநோயையும்
பசலையையும் தந்து, பிரிந்து சென்றார்.
“ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய்
நீ துறத்தலின்
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
காரிகை பெற்ற தன்கவின் வாடக் கலுழ்பு ஆங்கே
பீர் அலர் அணிகொண்ட பிறைநுதல் அல்லாக்கால்.” ---கலித்தொகை.
ஊரார் அலர் எடுத்துத் தூற்றவும், நீ அவளை நினையாது இருக்கின்றாய், நீ அவளைப் பிரிந்தமையின் மிகுகின்ற வருத்தமுடைய காமநோயையும் கூறாது மறைத்தாள்
; எடுத்துரைக்கும் பேரழகுபெற்ற தன் அழகு கெடும்படியாக மனம் கலங்குதலின்,
பீர்க்கம் பூவை அடுக்கி வைத்தாற்போன்று, பிறை போன்ற
நுதலிடத்தே பசலை படர்ந்து பரவி உள்ளதே ; இதை மறைத்தாள் அல்லவே….
நுதல் புலப்படுத்திவிட்டதே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக