திங்கள், 1 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1180


திருக்குறள் -சிறப்புரை :1180

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. ------ ௧௧ ௮ 0

அடித்து முழக்கப்படும் பறையைப்போல, நான் படும் துன்பத்தினை, என் கண்கள் ஊரார் அறிந்துகொள்ளுமாறு  வெளிப்படுத்துவதால் அதனை  ஊர் மக்கள் தெரிந்துகொள்வது எளிதாயிற்று.

புனவன் துடவைப் பொன்போல் சிறுதினைக்
கடிஉண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறிஉறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.” -----குறுந்தொகை.

குறவனின் தோட்டத்தில் விளைந்த பொன் போன்ற சிறிய தினை, சுற்றத்தாருடன் புதிது உண்பதற்காகாக் கடவுளுக்குப் பலியாக இட்ட வளம் பொருந்திய கதிரைக்  கடவுளுக்கு இட்டது என்று அறியாமல் உண்ட மயில், தெய்வம் ஏறி ஆடுகின்றவள் அழகினைப் போல, உள்ளம் வெந்து, உடல் நடுங்கும். இத்தகைய தெய்வங்கள் உறையும் மலைநாட்டின் தலைவனுடைய நட்பு, நீர் மிக்க கண்களால், அயலார் பலராலும் நினைப்பதற்குக் காரணமாயிற்று. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக