புதன், 24 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1217


திருக்குறள் -சிறப்புரை :1217

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்எம்மைப் பீழிப் பது. -------௨க௭

ஒரு பொழுதும் நனவில் வந்து அன்புசெய்யாது, கொடுமை புரிந்த காதலர், இப்போது நாள் தவறாமல் நம் கனவில்வந்து வருத்துவது எத்தன்மைத்தோ…?

"மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
நன்னுதல் பசத்தல் யாவது துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ." ---ஐங்குறுநூறு.

தலைவ…! என் தோழியாகிய நின் காதலி மின்னல் என ஒளிவிட்டு விளங்கும் தன் அணிகள் நெகிழ்ந்து வீழுமாறு உடல் மெலிந்து தன் நெற்றிப் பசலையூர நிற்கின்றாள். அதற்குக் காரணமாவது, அவள் தான் காணும் கனவில் நின் மார்பை நெருங்கிப் புல்லிப் பின் கண் விழித்தபொழுது அம்மார்பினைக் கண்ணால் காணமுடியாமையே வேறொன்றுமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக