திருக்குறள்
-சிறப்புரை
:1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.----- ௧௧௮௪
எப்பொழுதும் என்மனத்தால் நினைப்பதும் அவர் குணங்களை
உரைப்பதுமாகவேயிருந்தும் என் மேனியெல்லாம் பசலை பரவிவிட்டதே, இது வஞ்சனையாலன்றி வேறு எதுவோ..?
“ நுதலும் நுண்பசப்பு இவரும் தோளும்
அகல்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு…….” ----அகநானூறு.
நெற்றியும் நுண்ணிய பசலை படரவும் ; தோளும்
அகன்ற மலையிலுள்ள குறுங்காட்டில் ஆய்ந்து அறுத்தெடுத்த மூங்கில் துண்டைப் போன்று அழகு
அழிய வாட்டமுற்றது. பிரிவுத் துன்பத்தை மறக்க, அவர் பண்புகளை நாள்தோறும் யான் நினைவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக