திங்கள், 8 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1186


திருக்குறள் -சிறப்புரை :1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. ------- ௧௧௮

விளக்கின் ஒளி அகலும் நேரம் பார்த்துச் சூழும் இருளைப்போல, தலைவனுடைய முயக்கம் நெகிழும் நேரம் பார்த்து பசலைப் பற்றிப் படர்கின்றது,

ஊர் உண் கேணி உண் துறைத் தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு வுழித் தொடுவுழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்தலானே. ----குறுந்தொகை.

ஊரார் நீர் உண்ணுதற்குரிய கேணியின், நீர் உண்ணும் துறைக்கண் பரந்து செறிந்து காணப்படும் பாசியின் தன்மையுடையது பசலை.  பசலையானது, காதலர் தலைவியைத் தழுவுந்தோறும் தழுவுந்தோறும்  நீங்கவும் ; தழுவுதலை விடுந்தோறும் விடுந்தோறும் உடலெங்கும் பரவுவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக