புதன், 10 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி - 11 - 12

அகநானூறு – அரிய செய்தி - 11                    
                                                       நாழிகை வட்டில் / நாழிகை
 கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
 சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி
கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய
நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குரல் எழிலி….
                 மதுரையாசிரியர் நல்லந்துவனார், அகம். 43 :  1 – 8
 தண்ணிய முழக்கத்தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார்காலமானது, கடலின் நீரை முகந்து நிறைந்த சூலினையுடைய கரிய மேகம், ஒலிமிக்க மின்னலுடன் வலமாக எழுந்துசென்று ஒலித்து, ஞாயிற்றின் வெம்மையால் வருந்திய புற்கென்ற தலையினையுடைய இளைய பெண் யானை, மேலே உயர்த்திய தன் கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்தில் களிற்றுடன் படிந்து விளயாட, நிலத்தினும் வானுனும் மழைக்கால் நீர் பொருந்திச் சேர்ந்திட, குறிய நீரையுடைய நாழிகை வட்டிலால் நாழிகை அளந்து கூறுவார் கூறலன்றி  ஞாயிறு உள்ள இடம் இதுவென அறியப்படாமையின் உலகம் அஞ்சுதலடைய, பரந்து பெய்யும் மழையொடு பொருந்தியது.
மழை பொழிதல்அறிவியல்ஞாயிறு மறைந்த நிலைநாழிகை அறிய இயலவில்லைகரிய மேகம் வலமாக எழுதல்வானியல்- ஆய்க
அகநானூறு – அரிய செய்தி - 12                    
                                                  திங்களைக்காட்டிஉணவூட்டல்
புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி
முகிழ்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவையாயின் தருகுவன் பாலென
 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார், அகநா.54; 15-19

நெல்லிக் காய் தின்றவர்நீர் குடி சுவைபோல் மழலைபொன் தாலி அணிந்த என் மகனிடம் வருகுவையாயின்நிலாவைக் காட்டி நீயும்  வந்தால் நினக்கும் பால் தருவேன். ( கொன்றை அம் குழலர்கொன்றையினது கனியாய அழகிய குழலினை இசைக்க – தீவியம் – இனிய (திவ்வியம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக