வியாழன், 11 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி - 15 16 - 17

அகநானூறு – அரிய செய்தி  - 15                  

சுவரில் எழுதுதல்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
   மாமூலனார், அகநா.61:2
 தலைவர் பிரிந்த நாளைக் குறித்ததெழுதி வைத்த நீண்ட சுவரினை நோக்கி -  சென்ற நாட்களை எண்ணியுணர்ந்து,  வருந்தி ...
அகநானூறு – அரிய செய்தி - 16                    
                                                                    கொல்லிப் பாவை
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்
                                                                          பரணர், அகநா. 62: 13-15
வெல்லும் வேல், கொல்லும் படை உடைய சேரன்கொல்லி  மலைஅருவி நீர் உடைய மலையின் அகன்ற இடம் அழகுற,தெய்வமாக  அமைந்தகொல்லிப் பாவை போன்ற….
அகநானூறு – அரிய செய்தி - 17                   

களவுப் புணர்ச்சி
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயும் அறியா மறையமை புணர்ச்சி
பூசல் துடியில் புணர்பு பிரிந்திசைப்பக்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி  நெருநல் ….
                                                                     பரணர், அகநா. 62: 5-11
சிவந்த வாய்மார்பில் முலைமூங்கில் தோள்குவளைக் கண்பேயும் அறியா க் காலத்தேகளவுப் புணர்ச்சிஅலர் எழகளவு நீங்க அஞ்சிகாவிரி வெள்ள நெடுஞ்சுழியில்  படிந்து குளிப்பவள் போல் நேற்றுஉள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவிஆகத்திற் பொருந்திக் கிடந்தனள். ( நீத்தத்திற் ( வெள்ளம்) குளிக்குமிடத்துக் குளிருமாறுபோலக் குளிர முயங்கிநாட்டார் )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக