பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 3
சிறுபாணாற்றுப்படை
-
இடைக்கழிநாட்டு நல்லூர்
நத்தத்தனார்
முல்லை சான்ற கற்பு...
30
பிரிவிலும் துயரத்தைப் பொறுத்திருந்து வாழும் கற்பு நெறி
வட புல இமயத்து வாங்கு விற் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
48,
49
சேர நாட்டு அரசர் குடிப் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த வலிய
தோளை உடையவனும் வட இமயத்தில் தன் வில் இலச்சினையைப் பொறித்தவனுமான குட்டுவன்.
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரை ..
66, 67
தமிழ் வீற்றிருந்து மனமகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்
தெருக்குகளை உடைய மதுரை.
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன் ...
85 –
87
, காட்டில் குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கமுற்றுத் தன்
போர்வையைக் கொடுத்த அருட் பண்புடையவன் ஆவியர் குடியில் தோன்றிப் பொதினி மலைக்குத்
தலைவனான பேகன்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரி ...
89
– 91
பற்றிப் படரக் கொழுகொம்பின்றி வாடிய முல்லைக் கொடிக்குத்
தனது பெரிய தேரை அளித்தவனும் வெள்ளிய அருவி வீழும் பறம்பு மலைக்கும் அரசன் பாரி.
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்
கழல் தொடித் தடக் கைக் காரி ...
93
– 95
பரிசில் பெற
வருவோரிடம் இனிமையாகப் பேசிக் கொடை வழங்கி, ஒளி பொருந்தியதும் பகைவர்க்கு
அச்சத்தைத் தரக்கூடியதுமான வேலைத் தாங்கிய தொடியணிந்த கையை உடையவன் காரி.
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகன் ...
101
– 103
அமிழ்தினும் இனிய நெல்லிக்கனியை அதன் அருமையை அறிந்திருந்தும்
தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தவன். கொற்றவையின் சினம் திகழும் ஒளிமிக்க வேலையும்
ஆரவாரிக்கின்ற கடல்போன்ற படையினையும் உடையவன் அதியமான்.
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன
அடையா வாயில் ...
203 – 206
பொருநர், புலவர், வேதம் ஓதும் அந்தணர் முதலியோர் வருகையை
நோக்கிக் கடவுள் உறையும் மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போல் எப்பொழுதும் திறந்தே இருக்கும் நல்லியக்கோடனின்
அரண்மனை வாயில்.
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
207
– 209
நல்லியக்கோடனின்
புகழுக்கு அவனின் செய்ந்நன்றி மறவாமையும் சிற்றினம் சேராமையும் இரவலர் மாட்டு
இன்முகமுடைமையும் எவரிடத்தும் இனியனாம் தன்மையும்
ஆகிய அருங்குணங்களே காரணம் என்று புகழ்வர் சான்றோர்.
அறிவு மடம் படுதலும் அறிவு நன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த
.
216 – 218
அறியாதார் கூறும் கூற்றை அறியாதான் போன்று
கேட்டுக்கொள்ளுதலும் சொற்சுவை, பொருட்சுவை, கலை நுணுக்கம் ஆகியன அறியும் அறிவுடைமையும்
புலவர், கலைஞர் ஆகியோர்தம் தகுதி அறிந்து சிறப்புச் செய்தலும் நல்லியக்கோடனின்
நற்பண்புகளாம்
முற்றும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக