வெள்ளி, 26 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -121-125

அகநானூறு – அரிய செய்தி -121
                                             புணர்ச்சி – குறிஞ்சி
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்தெம் இடைமுலை பொருந்தித்
துனிகண் அகல வளைஇக் கங்குலின்
இனிதி இயைந்த நண்பவர்.......
................................................
இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்ப யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு
அடக்குவம் மன்னோ தோழி
    மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா.328 : 1 – 5, 9- 11
 மிக்க மழையைப் பொழிந்த நள்ளென்னும் நடு இரவில் , பாம்ம்பினது பசிய தலையை இடறிக்கொண்டு, அந்தப் பாதி இரவில் வந்து எம் முலையிடையே பொருந்தி, தமது வருத்தம் தம்மிடத்து நின்றும் நீங்க, ஆகத்தைத் தழுவி,இரவெல்லாம் இங்ஙனம் இனிமையாகப் பொருந்திய நண்பினை, விள்ங்கும் வளை நெகிழவும் நமது துன்பம் பரவி வருத்தவும்....
 அவர் முயங்குந்தோறும் முயங்குந்தோறும் வருந்த முகந்துகொண்டு நம் மார்பின் கண்ணே அடக்கியிருப்போம்  ... அது கழிந்ததே.
அகநானூறு – அரிய செய்தி -122
                                               புணர்ச்சி - பாலை
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறு
உயிர்குழைப் பன்ன சாயற்
செயிர்தீர் இன்றுணைப் புணர்ந்திசி னோர்க்கே
                                                                பரணர் அகநா. 367 : 14 -16
நல்ல மார்பகத்தேயுள்ள அழகிய முலையினைப் புல்லுந்தொறும், உயிர் குழைவது போலும் மென்மை வாய்ந்த குற்றமற்ற இனிய துணைவரை கூடியிருப்பவர்கட்கு –  மாலப் பொழுது உறுதியாக இனிதாகும்.
அகநானூறு – அரிய செய்தி -123
                                             களவுப் புணர்ச்சி
இரும்பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று
அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை
எழுதி யன்ன திண்ணிலைக் கதவம்
கழுதுவழங் கரைநாள் காவலர் மடிந்தெனத்
திறந்துநப் புணர்ந்து நம்மிற் சிறந்தோர்
இம்மையுலகத் தில்லெனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
-                                                        மாமூலனார், அகநா.311: 1 – 7
கழுது = பேய்
307- பாழடைந்த கோயில்,- கரடி புற்றாஞ் சோறு தேடும்-
அகநானூறு – அரிய செய்தி -124
                                          மட்கலம் சுடும் சூளை, மலைக் குகையில் பரண்
 இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக்
கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட
-      பிசிராந்தையார், அகநா. 308 :5, 6
விளங்கும் மலை மறையுமாறு வெள்ளிய மேகம் சூழ்ந்து, மட்கலம் சுடும் சூளையிற் புகை போலத் தோன்றும் நாடனே.
அகநானூறு – அரிய செய்தி -125
                                 மூங்கில் குழாயில் புளிச் சோறு,பசியால் காது அடைத்தல்
பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர் பேணிக் கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
-                                                         மாமூலனார், அகநா. 311 : 8 – 11

-      நீர் அற்று ஒழியத்     திசையெல்லாம் கொதிக்க புதிய வழிப் போக்கர் வருங்கால் அவர்களைப் போற்றி, ஆயர்கள், இளைய எருதுகளின் கழுத்தில் கட்டியுள்ள இனிய புளிச் சோற்றை, அப்புதியவரின் காதடைப்பு நீங்க,தேக்கின் இலையில் பகிந்தளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக