செவ்வாய், 9 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி-5

அகநானூறு – அரிய செய்தி-5                     

                                                                  . வன விலங்குகளின் வாழ்க்கை
பருந்திளைப் படூஉம் பாறுதலை ஓமை
 இருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட
மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியற் பிணவல் தீண்டலின் பரீஇச்
செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவல முரணிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலர்
ஊறா திட்ட உவலைக் கூவல்
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங் கியவின் அகழ்ந்த குழிசெத்
திருங்களிற் றினநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே
                                 காவன் முல்லைப் பூதனார், அகம்.21 :  15 – 27
காடு – பருந்து ஈன்று காவல் காக்கும் சிதறிய தலையை உடைய ஓமை மரங்கள்- குட்டி ஈன்ற மென்மையாகிய அழகிய பெண் நாய் பசித்திருக்க – பசிய கண்களையுடைய ஆண் செந்நாய் ஆண் பன்றியைத் தாக்க – அஞ்சி ஓடிய பெண் பன்றி ஈந்தின் மோதி செங்காய்களை உதிர்க்க -  மண் மேடாகிய வன்னிலத்தில் –வலிய கூர் உடைய குந்தாலி கொண்டு கூழ் உண்ணும் கூவலர் கிணறு வெட்டுவோர் அகழ்ந்து நீர் ஊறாமையால் விடுத்த – தழை மூடிய கிணறுகளை -  தமது வெள்ளிய கொம்புகளைக் கவர விரும்பிய இரக்கமற்ற வேடர்கள் தங்களை அகப்படுத்த அகழ்ந்து மறைத்த குழிகள் எனக் கருதி அவற்றைத் தூர்க்கும். (  ந. மு. வே. நாட்டார், உரை )
இன்றைய விலங்கியல் அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக