சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 8

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 8
 குறிஞ்சிப் பாட்டு - கபிலர்
நல் கவின் தொலையவும் நறுந் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்
உள் கரந்து உறையும் உய்யா அரும்படர்
                                                                                       9 – 11
அன்னையே ! தலைவியின் நல்ல அழகு கெடவும் தோள்கள் மெலியவும் வளையல் கழன்று வீழ்தலைப் பிறர் அறியவும் தனிமை அவளைத் துன்புறுத்தவும்  மனத்தினுள் மறைந்து இருக்கின்ற பிழைத்தற்கரிய நோய்.- தோழி
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந் நிலை   
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்
                                                                                15 – 18
அன்னையே !  சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையும் என்றால் அவற்றைக் குற்றமற நீக்கிப்  புகழை நிலை நிறுத்துதல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை என்று கூறுவர் சான்றோர். - தோழி
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
நாடு அறி நல் மணம் அயர்கம் சில் நாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் ...                                                                                                                            231233
  அன்னையே ! தலைவியின் அழகிய முன்கையைப் பற்றி நும்மவர் எமக்குத் தர, நாட்டிலுள்ளோர் அறியும்படி நன்மணம் புரிவோம்; சிலநாள் மனக் கலக்கமின்றிப் பொறுத்திருப்பாய் என்று கூறினான் தலைவன். – தோழி        

                                   முற்றும்                                                                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக