ஏலாதி – பொன்மொழிகள்
கணிமேதாவியார்
இன்பம் பிறழின் இயைவு எளிது மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது
. 3 : 3, 4
இன்ப நெறி தடுமாறிச் சென்றால் மீண்டும் பிறவி எடுத்தல்
எளிது ; ஆயின் அப்பிறவித் துன்பத்தை நீக்குதல் அரிது.
உண்டி உறையுள் உடுக்கை இவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று
-
9 : 3, 4
வறியவர்களுக்கு
உணவும் இடமும் உடையும் கொடுப்போர் யாவராலும் மதிக்கப்பட்டு இனிது வாழ்வார்கள்.
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ...
- . 39
: 1, 2
உயிர் விடுதல்
எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது . மனை வாழ்க்கையை ஏற்றல்
எளிது ; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல்
அரிது.
கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும்
ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
ஒழுக்கும் உடையவர் செல்லாரே ...
62 : 1-
3
கல்வியும்
அதற்குத் தகுந்த ஒழுக்கமும் உடைய சான்றோர்கள், கூத்தாடுமிடத்தும் திருவிழா
நடக்குமிடத்தும் திருமணம் நிகழுமிடத்தும் கொலைக் களத்தும் போர்களத்தும் இவை போன்ற
பிறவிடங்களுக்கும் செல்லமாட்டார்கள்.
சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே
ஓதலின்
அன்புடையார்க்கு
உள்ளன ஆறு குணமாக
. 68 : 1- 3
நண்பர்கள்
இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும்
வறுமையுற்றபோது பொருள் கொடுத்து உதவி செய்தலும் இன்சொல் கூறுதலும் கூடியிருத்தலை விரும்புதலும் வருந்தும்போது
வருந்துதலும் பிரியும் காலத்தில்
உள்ளம் கலங்குதலும் ஆகிய இந்த ஆறு இயல்புகளும் உண்மையான நண்பர்களுக்கு
இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக