செவ்வாய், 9 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி-2

அகநானூறு – அரிய செய்தி-2

வெண்கல் அமிழ்தம்.
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
             மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், அகம். 207: 1-4
தெய்வம் உறையும் கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து, நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினைப் படைக் கலன்களைக் கையிற் கொண்டெழுந்த வீரச் செயல்கள் புரியும் உமணர்கள் மூட்டைகளாக அடுக்கி, வெண்ணிறக் கழுத்தினைக்கொண்ட கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு , நிமித்தம் பார்த்தவராய் ; அவற்றை மேற்குத் திசைகளில் உள்ள இடங்களுக்குக் கொண்டு செல்வர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக