செவ்வாய், 9 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி-3

அகநானூறு – அரிய செய்தி-3
  கோசர்கள்
நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்ற வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியின்
புன் தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
மாவீசு வண்மகிழ் அஃதை போற்றி
காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர் 
                                                -கல்லாடனார்,அகம்.113:1-5)
நண்பர்கள் ஆக்கம் இழந்து கேடுற்றபோது அவர்பால்கொண்ட நட்பில்  ஒருபொழுதும் மாறுபாடு கொள்ளாதவராய் அவர்க்குத் தாமே வலியசென்று  உதவும்  பிறழாத கோட்பாடு உடையவர்கள் கோசர்கள்.
சங்க இலக்கியங்களில் கோசர்கள் புகழ்ந்து பேசப்படுகின்றனர்
…. ............................. நன்னன்
நறுமா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வண்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே
                                        பரணர், குறுந். 73 : 2 – 5
kōcar,
n.
An ancient caste of warriors;
பழைய வீரக்குடியினருள் ஒரு சாரார். மெய்ம் மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகநா.15).
இலக்கியங்களில் புகழ்ந்துபேசப்படும் நன்னன்- கோசர் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்தல் வேண்டும். மேலும் காண்க : குறுந். 292, அகநா. 205.
                          கோசர் வரலாறு - ஆய்க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக