ஞாயிறு, 7 ஜூன், 2015

அறிவியல் - குறள்

அறிவியல் - குறள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - 355
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – மெய்ப்பொருள் கண்டனர்.
காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் ( 113 ) முதல் குறட்பா,  அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும்.

1.   பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.

இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . - பாவாணர்
The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.  
Dr. G.U. Pope
Love makes water taste sweet
New York : Love really is sweet. Both candy and water taste sweeter when people think about love, a new study has found…………………..  We always say ‘ love is sweet ‘. We thought let’s see whether this applies to love “ said researcher  Kai Qin Chan, at Radbound University Nijimegen in the Netherlands. Chan and colleagues conducted three experiments on 197 students at the National University of Singapore…………………………. Love made the water taste sweeter …. Times of India, 27.01.14
காதல் வயப்பட்டோர் உணர்வின் வழி,  அவர்தம் வாயில் சுரக்கும் உமிழ் நீர்  இனிமை உடையதாய் இருக்கும்.எனவே தண்ணீரும் சுவை மிகுந்து தோன்றும்; தண்ணீருக்கென்று சுவை ஏதும் இல்லை. என்பது அறிவியல்.  அருவி நீர் இனிமை உடையது என்பதும் ;  மான் உண்டு எஞ்சிய கலங்கிய நீர் தேன்கலந்த பாலினும் மிக்க இனிதாயிற்று என்பதும் காதல் வயப்பட்ட நிலையை உணர்த்தும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக