அகநானூறு – அரிய செய்தி -66
205 –சொற்பெயர் தேயம்
கல்பிறங்கு
ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே
நக்கீரர். அகநா.205 : 23, 24
கற்கள் நிரம்பிய இடங்கள் குறுக்கிட்ட மொழி வேறுபட்ட தேயங்களிலுள்ள
பாலை நிலத்தைக் கடந்து நம் தலைவர் சென்றுள்ளார். சொற்பெயர் தேயம் – மொழிபெயர் தேயம் வேறுபாடு .மேலும்
காண்க . 211 – மொழிபெயர் தேயம்,
மத்தி
= படைத் தலைவன்
பரதவன் = மீன் பெயர்
213 – விரவு மொழி தேயம், அரும்பெறல் உலகம் ––
ஆய்க.
அகநானூறு – அரிய செய்தி -67
செழியன் வென்ற எழுவர்
பொனணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிபடக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – கல்லாடனார், அகம். 209: 3-6
நீண்ட
தேரினை உடைய பாண்டியர் பெருமானாகிய கணிய மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்,
நன்கு இயற்றப்பட்ட தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்,
தன்னோடு பகைத்தெழுந்த எழுவரையும் தன் அடிப்பட்டு அடங்கிக் கிடக்குமாறு
வெற்றி பெற்றதலையாலங்கானத்துப் போர்க்களத்தே…
வென்ற எழுவர் – செழியன் ஆலங்கானத்து அகந்தலை சிவப்ப – சேரல் செம்பியன்,
சின்ங்கெழு திதியன், போர்வல் யானை பொலம்பூண் எழினி, நாரரி நறவின்
எருமையூரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான்
இயல் தேர்ப் பொருநன் என்ற எழுவர். (அகம்36:13-20) பாடல் பகுதியால் அறியலாம். – ஆய்க.
அகநானூறு – அரிய செய்தி -68
பதுக்கை – கொன்று புதைத்தல்
ஆள் அழித்து உயர்ந்த அஞ்சுவரு பதுக்கை –இறங்குகுடி குன்ற நாடன், அகம்.215:
11
உலைக்களத்தில் நன்கு திருத்தமாகச் செய்யப்பட்ட அம்பினை உடைய
மறவர்கள் வழிப்போவோரைக் கொன்று பிணங்களைக் கற்கள் கொண்டு மூடிவைப்பர். ஆண்பருந்து பிணத்தின் விழிகளைத் தோண்டிப் பெண்பருந்துக்கு ஊட்டும்.
கொடுவில் கானவர் கண் நீட்த் தொலைந்தோர்
படுகளத்து உயர்ந்த மயிர்த்தலைப் பதுக்கை –மதுரை ஈழத்துப் பூதஞ்சேந்தனார், அகம்
231 5, 6.
அகநானூறு – அரிய செய்தி -69
வஞ்சி மர விறகு –மீன் சுட
நாண்கொள் நுண்கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரைப்படுத்த வராஅல்
நார் அரி நறவூண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்-
ஐயூர் முடவனார், அகம்.216 : 1-4
பாண்மகள் தூண்டில் போட்டு வரால் மீனைப்பிடித்து கள்ளையுண்டு
களித்திருந்த தன் தந்தைக்கு வஞ்சி மரத்து விறகுகொண்டு மீனைச்சுட்டு அவன் வாயில் ஊட்டுவாள்.
அகநானூறு – அரிய செய்தி -70
திருமணம்-
மனமகன் கரிய தாடி
உடன்போக்கு - வேற்று மணமகன் - திருமண நாளன்று தலைவனுடன் உடன்போக்கு.
நனைவிளை நறவின் தேறல் மாந்தி
புனைவினை நலில் தருமணல் குவைஇ
பொம்மல் ஓதி எம்மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால்
புதுவது புனைந்த சேயிலை வெள்வேல்
மதியுடம் பட்டமை அணற் காளை –
கயமனார், அகம் 221 :1-6
அரும்புகளினின்று விளைந்த கள் உண்டு – அலங்கரித்த நல்ல வீடு – புதிய மணல் பரப்பி
– மகள் திருமணம் – தாய் தந்தையர் விழா ஏற்பாடு.
கையில் வெண்ணிற வேல் - கரிய தாடி - தலைவனுடன் போக தோழி ஏற்பாடு
செய்தனள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக