ஊழலை
ஒழிக்க வேண்டுமா……?
1.
பிரதமர்
மோடி அவர்கள் ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகப் பெருமை கொள்கிறார். முதலில் அவர் தன்னைத் தூய்மைப்
படுத்திக் கொள்ள வேண்டும் குற்றப் பின்னணி
உடையவர்களை வெளியேற்றி நாடாளுமன்றத்தைத் தூய்மையாக்க வேண்டும்.
2.
மாநிலமொழியில்
நீதி – நிருவாகம் நடைபெறவேண்டும்
3.
அயல்
மொழியால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
4.
மாநில
மொழியறிவு இல்லாத - வேற்றுமொழி ஆளுநர்கள்- உயரதிகாரிகள் நாட்டின் சீரான வளர்ச்சிக்குத்
தடைக்கற்கள்.
5.
பெரும்பாலான
உயர் அதிகாரிகள் நிருவாகத் திறமையற்றவர்கள்-
6.
உயர்பதவிகள் - பட்டத்தை வைத்துத் தேர்ந்தெடுப்பதைத்
தவிர்க்க வேண்டும்.
7.
உயர்பதவிகளுக்கு
- அந்தந்தத் துறையில் நேர்மையும் பட்டறிவும் உடையவர்களை நியமிக்க வேண்டும்.
8.
பொதுமக்கள்
அலுவலகம் நோக்கிப் படை எடுப்பததை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
9.
அரசு
ஊழியர்களின் சொத்து விவரம் -ஆண்டுதோறும் செய்திதாளில்
வெளியிட வேண்டும்.
10.
அரசியல்வாதிகளின்
சொத்துவிவரம் – அரசியலுக்குமுன்; அரசியலுக்குப்பின் – செய்தித்தாளில் வெளியிட வேண்டும்.
11.
கிராம
நிருவாக அலுவலர் தன் பகுதியில் தோன்றியுள்ள புதிய பணக்காரர்கள் பற்றிய தகவல்களைத் திரட்ட
வேண்டும்.
12.
குற்றப்
பின்னணி உடைய எவரும் எந்த அரசு / அரசியல் பதவியிலும் இருக்கக் கூடாது- சொத்துக்களைப்
பறிமுதல் செய்ய வேண்டும்; வாக்காளர் தகுதியைப் பறிக்க வேண்டும்.
13.
மாவட்டம்
தோறும் ஊழல் ஒழிப்புக் குழு அமைக்க வேண்டும். படித்த / படிக்காத நேர்மையானவர்கள் குழுவில்
இருத்தல் வேண்டும்.
14.
தாய்மொழிக்
கல்வியறிவு - நாட்டை நல்வழிப்படுத்தும் ; ஊழலை
ஒழிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக