திங்கள், 15 ஜூன், 2015

HOMOEOPATHY – On Superstitions

HOMOEOPATHY –  On Superstitions
மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் மருந்து
அதீத கடவுள் பக்தி- மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடத்தல் – சோதிடம் – சகுனம் – இன்னபிற சடங்குகளை நிறைவேற்றத் துடித்தல் ஆகிய அறிகுறிகள் கோனியம் (Conium ) நோயாளிக்குரிய மனக்குறிகளாகும். ஓமியோபதி மருத்துவர் மேஜர் தி.சா. ராஜூ அவர்கள் இம்மருந்தைப் பற்றிக் குறிப்பிடும் போது “ நான் வழக்கமாக நோயாளிகளைப் பார்க்கும் நேரத்திற்குப் பின்னால் அவர் வந்திருந்தார் ; ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டேன்; அவரோ!....` இந்த நேரம் வரை எமகண்டம் ”என்று விடையளித்தார்- அவருடைய பெயர் மதிஒளி ஒரு கல்லுரியில் இயற்பியல் போதிக்கிறார். நான் அதிகம் யோசிக்கவில்லை. கோனியம் மக்குலேட்டம் இரு மாத்திரைகள் அந்த அன்பருக்கு – அந்த மருந்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் ஜே.டி. கெண்டின் ரெப்பர்ட்டரி பக்கம் 85 மூடநம்பிக்கை – கோனியம் தான் மருந்து என்பது அவருடைய கருத்து.”
  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக