கைந்நிலை – பொன்மொழிகள்
புல்லங்காடனார்
கானக நாடன் கலந்தான் இலன் என்று
மேனி சிதையும் பசந்து
1
: 3, 4
தோழி! தலைவன் என்னோடு கலந்து மகிழ்ந்து இனிது இருந்தான்;
இப்பொழுது என்னைவிட்டுப் பிரிந்தான்
என்பதை அறிந்து என் உடல் பசலை நிறமாகி அழகு அழிந்தது. – தலைவி
பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி
19
: 3, 4
தலைவி ! நினது நெற்றியில் பசலை நீங்கி ஒளிபடர்ந்து
வருகின்றது ஆதலால், பருக்கைக் கற்களை உடைய காட்டு வழியில், மிகுந்த பொருள் ஈட்டச் சென்ற தலைவர் விரைந்து
வருவார்; வருந்தாதே . - தோழி
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக