அகநானூறு – அரிய செய்தி -111
எழுத்துடை நடுகல்
மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகற்
கண்ணி வடிய மண்ணா மருங்குற்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ்
வாறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
மதுரை மருதன் இளநாகனார், அகநா.
343 : 4 – 8
வண்டியினைக் கொண்ட உப்பு வணிகனது பெயர்ந்து செல்லும் உருளின்
பொலிவில்லாத பூண், சிதியச் செய்த வலிய பாறையிலுள்ள நடுகல்லின்,
இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில்கூரிய
உளியால் இயற்றப்பெற்ற கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள், அவ்வழியிலே
செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும். ( மரம் கோள் – அதனாலாய வண்டியைக் குறித்தது
அகநானூறு – அரிய செய்தி -112
தூம்பு – இசைக் கருவி
300 – கலி யாணர் = ஆரவாரமுடைய,அழகிய
301- எருக்கம் பூ – ஆடவர் சூட, ஆவிரைப் பூ – மகளிர் சூட
(கிணை- உடுக்கை,
தடாரிப் பறை. தேரை தெவுட்டும்: தெவுட்டுதல் – ஒலித்தல்; தேரை,
தட்டைப் பறையினைப் போல் ஒலிக்கும் தன்மையது, குறுந்.193;2,3.
ஐங்.453, 468, 494.) ( குறுநெடுந் தூம்பு=
குறுந் தூம்பு, நெடுந்தூம்பு; தூம்பு- மூங்கிலால் ஆகிய பெருவங்கியம் என்னும் இசைக்
கருவி. இது யானையின் கைபோலும் வடிவுடையது. அகம்.111: 8, 9. புறம் 152: 15. மலைபடு. 15)
அகநானூறு – அரிய செய்தி -113
301 கூத்தர்கள் வாழ்க்கை
நல்குநர்
ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர்வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர் இஃது என்னாஅர் தீது இல் வாழ்க்கை
கரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி
பாடு இன் தெண்கிணை கறங்க …..
அதியன் விண்ணத்தனார், அகநா.301:4 – 10
கூத்தர்கள், கொடைத் தன்மை உடையார் குறைவிலாது கொடுத்த பரிசிலாகிய சிறிய உணவினை இடைவிடாதும் பாதுகாத்து
வையாமலும் நன்கு உண்ணும் இயல்பினர், நீரில் வாழும் முதலையின்
அங்காத்த ( ஆவித்த – கொட்டாவி )வாயினைப் போன்ற பாயால்( ஆரை) வேயப்பெற்ற
ஒலிக்கின்ற வாயிணையுடைய வண்டியில் அமர்ந்து செல்வர்.இஃது எம்
ஊர் – என்று சொல்லும்படியாகத் தமக்கென்று ஓர் ஊர் இல்லாதவர்;
இருப்பினும் துன்பமிலா இன்ப வாழ்வினர்; பாலை நிலத்தே
வெப்பத்தாலான வழிநடை வருத்தத்தை மரத்தடியில் தங்கிப் போக்கிக் கொள்வர்.
குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கு அழல்விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல் வர
.............................................
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலப் புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இனிய ஓசையினையுடைய கிணைப் பறை ஒலிக்க, காண்பார்க்குக்
காட்சி இன்பம் உண்டாகுமாறு குவிந்த கொத்துக்களையுடைய நருக்கினது நெருங்கிய
மலர்களாலாய கண்ணி, கூத்தருள் ஆடவர் தலையினை அழகு செய்யும் காட்டுத்தீயின் அழல்
ஒளியில் தொடுக்கப்பட்ட ஆவிரைச் செடியின் மலர்களாலாய மாலை அவர்தம் மங்கையரின் வண்ண
மார்பகத்தின் அழகு முலைகளில் கிடந்தசையும்.
அகநானூறு – அரிய செய்தி -114
புணர்ச்சி
மார்பகம் – யாரும் காண இயலாது
…. யாவரும்
காணலாகா மாணெழில் ஆகம்- மதுரை மருதன் இளநாகனார், அகம்.220:8,9
யாவராலும்
காணவியலாத மாட்சிமைப்பட்ட அழகினையுடைய எம்தலைவியின் மார்பகத்தை …
அகநானூறு – அரிய செய்தி -115
அன்னை – தினைப் புனம் காக்கவிடாது மகளின்
........................................கைம்மிகச்
சில்சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல்கால் நோக்கும் அறனில் யாயே
மதுரை அறுவை
வாணிகன் இளவேட்டனார், அகநா.302:12 – 15
தினைப்புனம் காக்கச் செல்லவிடாத தாய் – கிளிகள் வந்து
வீழ்வதை அறிந்திருந்தும் அறவுணர்ச்சியில்லாத தாய் நம்மை வெளியே விடாது அழகு மிக,
சிலவாய தேமலை அணிந்த, நெருங்கிப் பெருத்த இள முலைகளை, தழைத்த கூந்தலையும்
பலமுறையும் நோக்குவாள் தாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக