திங்கள், 8 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி - 1

அகநானூறு – அரிய செய்தி - 1
232 – வேங்கை பூத்தல் – திருமண நாள்
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
                                           -நற்சேந்தனார்,அகம். 232 6-10
மன்றத்தில் வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பது போல் பொன்போல் பூத்தன முதிய மகளிரொடு  குறவர்கள் குரவைக் கூத்து ஆடுவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக