அகநானூறு – அரிய செய்தி -31
ஒடுமரம்
நெடுங்கால்
ஆசினி ஒடுங்காட்டும்பர்
மாமூலனார், அகநா.91: 12
நீண்ட அடியை
உடைய ஈரப்பலா மரங்களை உடைய ஒடுங்காடுஎன்னும் ஊருக்கு அப்பால்.
பாசி தின்ற பைங்கண் யானை - யானை பாசியைத்
தின்றமை நீர்ப்பசை கருதி என்க. கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – மழவர்கள்
களவாகிய உழவிற்கு எழும் இடமாகிய.களவு = உழவு. ஒடு- ஒருவகை மரம்
நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும் அமையும் எனக் கொள்வார்
அல்லர். –நெய்தல்.
அகநானூறு – அரிய செய்தி -32
வெறியாடு களம்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
முருகன் ஆரணங்கு என்றலின் அது செத்து……..
வெறிபாடிய காமக்கண்ணியார், அகநா. 98: 8-11
தாயானவள் தலைவியின் நோய் நீக்க, முதுமை வாய்ந்த பொய் கூறல் வல்ல கட்டுவிச்சியராய பெண்டிர்,
பிரப்பரிசியைப் பரப்பி வைத்து இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம்
என்று கூறலின் அதனை வாய்மையாகக் கருதி….
தெய்வம்-பூசனை99
பராஅம் அணங்கு உடை நகரின் மணந்த பூவின் – பரவக்கடன் பூண்ட தெய்வமுடைய கோவிலின்கண் கலந்து கிடக்கும் பூக்களைப்
போல. புனலிப்பூ – மோசி மல்லிகைப் பூ.
அகநானூறு – அரிய செய்தி -33
புற்றுமண் தின்னல்
கவன் மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
மாமூலனார், அகநா.101: 5-7
பிடரியை மறைக்கும் தலை மயிர் – சிவந்த கண்கள் –வாயில் எழும் இருமல் ஆகிய பகையைத் தீர்க்கும்
புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய் கன்றினையுடைய ஆனின் கொள்ளையர்.வாய்ப்பகை- வாயினின்று உண்டாம் பகை ; இருமல்; அவரது வரவை வெளிப்படுத்தலின் பகை என்றார்.
கட்டாவது முறத்திலே நெல்லையிட்டுக் குறி சொல்லுதல்- பிரப்பு – தினை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக