புதன், 1 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1232


திருக்குறள் -சிறப்புரை :1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.------ ௨ ௩க

பிரிவாற்றாது பசலையுண்ட கண்கள் சொரியும் கண்ணீர், முன்பு அன்பு செய்த காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கு எடுத்துரைப்பதைப் போல உள்ளது.

மெல்லம் புலம்பற் கண்டு நிலை செல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே.” –நற்றிணை.

 தலைவி…! மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு, பலமுறை நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவுகடந்து, மையுண்ட கண்களினின்று வெளிப்பட்ட  நீரே, நாம் கூற விரும்பாத செய்திகள் அனைத்தையும் கூறிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக