திங்கள், 6 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1241


திருக்குறள் -சிறப்புரை :1241

125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. ---- ௨ ௪க

நெஞ்சே..!  காதலர் பிரிவால் வருத்தும் காமநோயைப் போக்கவல்ல மருந்தொன்றினை, நீ ஆராய்ந்து கூறமாட்டாயா..?

அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல் மாநெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே.” ----நற்றிணை.

 நெஞ்சே….! நம்மிடம் அன்பில்லாத இளமகள், நாம் அருள்செய்தாலும் அங்ஙனம் அருள் செய்யாளாய் அகன்று போனாலும், நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள் , யான் அடைந்துள்ள காமநோயோடு கலந்த துன்பத்தை அழிக்கும் மருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகளேயன்றி, வேறொன்று சிறிதளவேனும் ருந்தாகும் தன்மையது இல்லைகாண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக