செவ்வாய், 21 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1271


திருக்குறள் -சிறப்புரை :1271

128. குறிப்பறிவுறுத்தல்

கரப்பினும் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்க லுறுவதொன்று உண்டு. ---- ௨ ௭க

தோழி…! நீ எதுவும் சொல்லாமல் உன் மனத்துள் மறைத்து வைப்பினும்;  உன்னையும் கடந்து ; உன்னை அறியாமல் ; உன் மையுண்ட கண்கள் உரைக்கும் செய்தி ஒன்று உள்ளது.

இன்று இவ்வூர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்
வென்ற வேல்நுதி ஏய்க்கும் விறல்நலன் இழந்து இனி
நின்றுநீர் உகக் கலுழும் நெடுபெருங் கண் அல்லாக்கால்.”—கலித்தொகை.

 இன்று இவ்வூர் அலர் தூற்றுகின்றது ; இவள் துன்பத்தை அறியாதவனாக இருக்கின்றாய் ; நீ இவளைத் துறந்தமையின், தன்னிடத்தே நிலைபெற்றிருந்த வருத்தத்தை உடைய காமநோயை என்னையும் உட்பட மறைத்தாள் ; வெற்றிகொண்ட வேலினது முனையைப் போன்று தன் ஆற்றலையும் அழகையும் இனி இழந்து நீர் நின்று உகும்படியாக நெடிய பெரிய கண்கள் கலங்குகின்றனவே, இதனை மறைத்தாள் அல்லவே…! கண் புலப்படுத்தி விட்டதே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக