வெள்ளி, 10 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1250


திருக்குறள் -சிறப்புரை :1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். ------ ௨ ௫0

நம்மோடு கூடிக்களிக்காது,, நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற தலைவரை, நாம் மனத்துள்ளே வைத்திருப்பதால்,  புற அழகை இழந்ததோடு அக அழகையும் இழந்து வருகின்றோம்.

மாலையும் அலரும் நோனாது எம்வயின்
நெஞ்சமும் எஞ்சும்மன் தில்லஎஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே.” –கலித்தொகை.

எம்மை நினையாது , உள்ளன்பு இல்லாத உள்ளத்துடன் பிரிந்த தலைவரை எண்ணிஎண்ணி மகிழ்ந்து நினைக்கின்றது எமது நெஞ்சம். இம்மாலைப் பொழுதையும் ஊரார் கூறும் அலரையும் பொறுத்துக்கொள்ளாதே, நெஞ்சமும் நம்மைவிட்டுப் போகா நின்றது, இனி என் செய்வேன்..?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக