திருக்குறள்
-சிறப்புரை
:1239
முயக்கிடைத்
தண்வளி
போழப்
பசபுற்ற
பேதை
பெருமழைக்
கண். ----- க ௨௩ ௯
தலைவியை இறுகத்தழுவி முயங்கிய கைகள் சிறிது நெகிழ்ந்த
போது, இருவருக்குமிடையே மெல்லிய காற்று
நுழைய, அச்சிறு இடைவெளியையும் பொறுக்கமுடியாமல் இப்பேதையின் குளிர்ந்த கண்கள் பசப்புற்றன.
“கழிபெரு நல்கல் ஒன்று உடைத்து என
என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ.” –கலித்தொகை.
புணர்ச்சிக்குப் பின்னர் மிகப்பெரிய தலையளி ஒரு
பிரிவை உடையது என்று உட்கொண்டு, என் தோழி நெஞ்சழிவாலே கலங்கி வருந்தினளாக . இத்தன்மை
உடையாள் நீர், ஒருநாள் ஒரு சிறுபொழுது, கூட்டம்
இடையீடுபடப் பிரிவீராயின் உயிர் வாழ்வாளோ….வாழாள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக