சனி, 25 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1280


திருக்குறள் -சிறப்புரை :1280

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. ------- ௨ ௮0

தமது காமவிருப்பைக் கண்ணால் புலப்படுத்திக் காதலுடன் ஏங்கி நிற்கும் அழகு, இயல்பாகவே நாணும் குணமுள்ள இப்பெண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்கும் தன்மையுடையதாம்.

அன்னை காக்கும் தொல் நலம் சிதையக்
 காண் தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டுநீர்
முத்துப்படு பரப்பில் கொற்கை முன் துறைச்
சிறு பாசடைய செப்பூர் நெய்தல்
தெண்ணீர் மலரில் தொலைந்த
கண்ணே காமம் கரப்பரி யவ்வே.’-----நற்றிணை.

அன்னை பாதுகாக்கும் இவளது பழைய அழகெல்லாம் சிதையும்படி, காணுந்தோறும் அழுதல் இல்லாமல், நெருங்கிய நீர் மிக்க முத்துகள் விளைகின்ற கடற்பரப்பினை உடைய கொற்கை நகரத்து முன்புள்ள  துறையில் இருக்கும் சிறிய பசிய இலைகளை உடைய அழகமைந்த நெய்தலின் தெளிந்த நீரில் உள்ள மலர் போலக் கண்களே அழகை இழந்தன  ; அவைதாம் காமத்தை மறைத்தல் இயலாது  நின்றனவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக