திங்கள், 6 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1242


திருக்குறள் -சிறப்புரை :1242

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு. ---- ௨ ௪௨

நெஞ்சே, நீவாழ்வாயாக…! காதலர் நம்மிடத்து அன்பில்லாதவராக இருந்தும், அவரை நினைத்து வருந்துகின்றாய், உண்மையில் நீயே பேதைமை உடையாய்..!

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்தபாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே.” ---ஐங்குறுநூறு.

 தோழி…! பசுமை முழுவதும் கெட, கதிர் வெம்மையால் பாழ்பட்டுப் போன, பாலையான காட்டினூடே செல்லுதற்கு அரிதான நெறியைக் கடந்துசென்ற தலைவர் தங்கியுள்ள இடத்திற்குச் சென்ற எம் நெஞ்சு, வருவதற்குக் காலம்கடத்துவது குறித்து நாம் இருவரும் ஆராய்வோம் வருக.
ஆற்றாமை மிக, அவள் நெஞ்சு காதலன் சென்ற இடத்தை நோக்கி விரைந்தது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக