வெள்ளி, 3 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1235


திருக்குறள் -சிறப்புரை :1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். ---- ௨ ௩ ௫

கையினின்று கழன்றுவீழும் வளையல்களும் இளமைநலனழிய வாடிய தோள்களும், பிரிந்துசென்ற தலைவரின்  கொடுமைகளைப் பலருக்கும் எடுத்துரைக்கும்.

பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்த எங்காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக
யாருமில் ஒருசிறை யிருந்து
பேரஞர் உறுவியை வருத்தாதீமே.”-----நற்றிணை

வாடைக்காற்றே..! எம்முடைய பருத்த தோளில் ஏற்றிய ஒளியுடைய வளைகள் நெகிழும்படி செய்த எம் காதலர், தாம் பொருள் ஈட்டுதற்குப் பிரிந்துசென்றார்,  ஆதலினால்  தேற்றும் துணை யாருமில்லாது, ஒரு பக்கத்தேயிருந்து  தாங்கற்கரிய துன்பம் உற்றோம், எம்மை வருத்தாதே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக