திருக்குறள்
-சிறப்புரை
:1274
முகைமொக்குள்
உள்ளது
நாற்றம்போல்
பேதை
நகைமொக்குள்
உள்ளதொன்று
உண்டு. --க ௨ ௭ ௪
மலராத மொட்டுக்குள்
மறைந்திருக்கும்
நறுமணத்தைப்
போல், இப்பெண்ணின்
குறுநகையில்
ஒரு குறிப்பும் மறைந்து உள்ளது.
“மெய்யதை மல்குமலர் வேந்த மாயப் புதுப்புனல்
பல்காலும்
ஆடிய
செல்வழி
ஒல்கிச்
களைஞரும்
இல்வழி
கால்
ஆழ்ந்து
தேரோடு
இளமணலுள்
படல்
ஓம்பு – முளை
நேர்
முறுவலார்க்கு
ஓர்
நகை
செய்து.” –கலித்தொகை.
தலைவ..! பெருகிய மலர் சூடின பொய்யை உடைய அப்புதுப்
புனலை, பலகாலும்
ஆடல் வேண்டித்
தேரோடு செல்லுமிடத்திலே, முளை ஒத்த முறுவலை உடையார்க்கு
ஒரு சிரிப்பை
உண்டாக்கி, நின்னைப்
பிடித்துக்
கரையேற விடுவார்
இல்லாத காலத்தே, இளமணலினுள்ளே
நின் தேரானது நிலை தளர்ந்து,புதையுண்டு விடாமல் காத்துக் கொள்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக