திருக்குறள்
-சிறப்புரை
:1240
கண்ணின்
பசப்போ
பருவரல்
எய்தின்றே
ஒண்ணுதல்
செய்தது
கண்டு.---- க ௨ ௪0
பிரிவால் வாடிய தலைவியின் ஒளி பொருந்திய நெற்றியில்
பசலை படர்வதைக்கண்ட கண்களும் பசலை எய்தித் துன்புற்றன.
“நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம்
நம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார் என்
ஒள்நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்
எண்ணுவது எவன் கொல் அறியேன்…” --கலித்தொகை.
காதலர்,
நுண்ணிய அழகினையும் மாமை நிறத்தினையுமுடைய பசலை பரந்த மார்பகம்,
தம் கண்ணோடு எதிராக வைத்துக்கட்டினது என்று கூறும்படி இமையாமல் பார்ப்பார்
; பார்த்தும் வேட்கை தணியாராய் என்னுடைய ஒளி பொருந்திய நுதலைத் துடைப்பார்;
பின்னை அவர் எண்ணுகின்ற
செயல் எத்தன்மையது கொல், யான் அதனை அறியேன்..!
பசலையின் வீச்சு...அருமை ஐயா.
பதிலளிநீக்கு