வியாழன், 23 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1276


திருக்குறள் -சிறப்புரை :1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.----- ௨ ௭ ௬

பெரிதாக அன்புசெய்து கூடித் தழுவுதல், அவர் தாங்க முடியாத பிரிவுத் துன்பத்தினைத் தந்து பிரிவுக் குறிப்பினைக் கொண்டுள்ளது.

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே.” ---குறுந்தொகை.

நடு இரவின்கண் தொகுதியாகிய மேகங்கள், மழையைப் பெய்தமை தோன்ற, மலை முழைஞ்சுகளில் பிற்றை நாளிலும் அருவிகள் ஒலிக்கும் நாடனே…! நீ மெய்யுற்றுத் துய்க்கும் இன்பம்,இரவுக்குறி வாய்க்கப் பெறாமையால், ஒருகால் நீங்குவதாயினும் நின்னிடத்து யாம் கொண்ட நட்பும் குறையுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக