ஞாயிறு, 19 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1267


திருக்குறள் -சிறப்புரை :1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின். ---- ௨ ௬ ௭

பிரிந்துசென்ற என் கண்போன்ற காதலர் வருவாராயின், காலம்தாழ்த்தி வந்தமை கருதிப் ஊடுவேனாஆவல் பெருக அவரைத் தழுவிக் கொள்வேனாஅவருடன் இணங்கி முயங்குவேனா…?  யாது செய்வேன் அறியேனே…!

மெல்லிறைப் பணைத் தோள் பசலை தீர
புல்லவும் இயைவது கொல்லோபுல்லார்
ஆர் அரண் கடந்த சீர்கெழு தானை
நல்வயல் ஊரன் நறுந் தண் மார்பே.” ---ஐங்குறுநூறு.

பகைவரின் கடத்தற்கு அரிய பல அரண்களை வெற்றிகொண்ட வெல்லும் போரை உடைய வேந்தனோடு, அவனுக்குத் துணைவனாகச் சென்ற நல்ல வயல்களை உடைய ஊரனின், நறுமணம் கமழும் குளிர்ந்த மார்பினை, என் மென்மையான, சந்தினைக்கொண்ட பருத்த தோள்களில் படர்ந்த பசலை அழிந்தொழியுமாறு அணைத்து மகிழப் பெறுவேனா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக