வியாழன், 16 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1261


திருக்குறள் -சிறப்புரை :1261

127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.----- ௨ ௬க

பிரிந்துசென்ற காதலரின் வரவை எதிர்நோக்கிய கண்கள்  ஒளியிழந்து அழகிழந்தன ; விரல்களும் அவர் சென்ற நாள் முதல் சுவரில் இழைத்த கோடுகளை எண்ணி எண்ணி தேய்ந்தன.

நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத்
தாள் வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி….” ------அகநானூறு.

 தோழி வாழி ….!  தலைவர் பிரிந்த நாளைக் குறித்து வைத்த நீண்ட சுவரினை , நோக்கிச் சென்ற நாட்களை எண்ணி உணர்ந்து, வருந்தித் துன்பத்து ஆழ்ந்திடாதே,  கூற்றம் கொள்ள இறக்காமல், பிறர் தம் பொருளைக் கொள்ளும்படி இறந்தோர் உறுதியாகப் பேறு பெற்றோராவர், என வற்புறுத்தி, ஊக்கத்தோடு வெற்றிபெறச் சேண் நிலத்தே வினைவயிற் பிரிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக