செவ்வாய், 7 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1243


திருக்குறள் -சிறப்புரை :1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். ---- ௨ ௪ ௩

நெஞ்சே…!காதலர் அன்புகொண்டு நம்மை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம், இந்நோய் செய்த அவரிடத்தில் இல்லையே, இங்கிருந்து அவரை நினைத்து வருந்தியிருப்பது எது குறித்தோ.?

யானை வவ்வின தினையென நோனாது
இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇச்
சிலையாந்து திரிதரும் நாடன்
நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே.” ----அகநானூறு.

யானைகள் தினைப்புனத்தைக் கவர்ந்து உண்டனவாக, அதனைப் பொறாது, இளையரும் முதியருமாகிய சுற்றமெல்லாம் ஒருங்கே கூடி, வில்லை ஆராய்ந்துகொண்டு திரியும் நாட்டை உடையோனாகிய நம் தலைவனது, உறுதியில்லாத இனிய சொல்லை உண்மையெனத் தெளிந்த நெஞ்சமே, இனி என்னாவது கொல்…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக