வெள்ளி, 17 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1263


திருக்குறள் -சிறப்புரை :1263

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரன்நசைஇ இன்னும் உளேன். ----- ௨ ௬ ௩

 இன்பம் நுகர்தலை விரும்பாது, வினையாற்றும் ஊக்கத்தினையே துணையாகக் கொண்டு சேய்மைக்கண்சென்ற தலைவரின் வருகையை எதிர்நோக்கியே இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.

பலரும் கூறுக அஃது அறியாதோரே
அருவி தந்த நாட்குரல் எருவை
கயம்நாடு யானை கவளம் மாந்தும்
மலைகெழு நாடன் கேண்மை
தலை போகாமை நற்கு அறிந்தனென் யானே.” ---குறுந்தொகை.

அருவியால் தரப்பட்ட காலத்தில் விளைந்த, பூங்கதிர்களுடன் விளங்கும் கொறுக்கான் தட்டையைக் கோடைக்காலத்தில் நீர் வேட்டு, ஆழமான நீர்நிலையைக் கண்டறிய விரும்பிச் சென்ற யானை, அதனைக் கவளமாக உண்ணும். இத்தகைய மலைநாடனது நட்பு, முதலில் நின்று பின் நீங்காமையை  யான் நன்கு அறிந்தனன்.(பிறர் அறிந்திலர்) தலை நாளன்ன இந்நட்பை அறியாத பலரும் கூறுவன கூறுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக