திருக்குறள்
-சிறப்புரை
:1284
ஊடற்கண்
சென்றேன்மன்
தோழி
அதுமறந்து
கூடற்கண்
சென்றதுஎன்
நெஞ்சு. ----- க ௨ ௮ ௪
தோழி…!
காதலரைக் காணாது தவித்தபோது
அவரோடு ஊடல் கொள்ள நினைத்தேன், ஆனால் அவரைக்
கண்டபோது ஊடலைத்துறந்து, கூடிமகிழ விரைந்தது என் நெஞ்சம்.
”கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோ – நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன்வாழ் பகை உடையார்க்கு.” ----கலித்தொகை.
உன்னைக் கண்டால் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும்
உன்னிடத்தே வந்து தங்கிவிடும் நெஞ்சு என்று சொல்லப்படும் தம்மோடு உடன் வாழ் உட்பகையை
உடையவள் நான் ; முன்னர் என்னை நின்மேல் வீழ்வித்த
நின் மார்பை தழுவ மாட்டேன் என்று கூறும் நிறை என்னும் குணத்தையும் பெறுதல் எளிதன்றோ?
அஃது அரிதன்றோ..என ஊடல் தீர்ந்தாள் கூறினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக