திருக்குறள்
-சிறப்புரை
:1234
பணைநீங்கிப்
பைந்தொடி
சோரும்
துணைநீங்கித்
தொல்கவின்
வாடிய
தோள். ----- க ௨ ௩ ௪
தலைவர் பிரிந்து சென்றமையால் இளமைஎழில்நலம் கெட்டு, எம் தோள்கள் வாடின, கை
வளையல்களும் கழன்றோடின.
“நுதல் பசப்பு இவர்ந்து திதலைவாடி
நெடுமென் பணைத் தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் எனச்
சொல்லின் எவன்ஆம் தோழி…” ---குறுந்தொகை.
மலைநாட்டின் தலைவனுக்கு, என்னுடைய நல்ல மாமை நிறமுடைய மேனியின் மிக்க
துயரத்தையுடைய நிலையை, நெற்றியில் பசலை படர்ந்து அல்குலின் திதலை ஒளி இழந்து, நெடிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்கள் மெலிந்து,
வளையல்கள் நெகிழப்பெற்று வேறுபாட்டை உடையள் ஆகுதல் நும்மால் ஆயிற்று
எனக் கூறினால் என்ன…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக