திருக்குறள்
-சிறப்புரை
:1252
காம
மெனஒன்றோ
கண்ணின்றென்
நெஞ்சத்தை
யாமத்தும்
ஆளும்
தொழில். ---- க ௨ ௫ ௨
காமவேட்கை இரக்கமில்லாத ஒன்றோ..? உலகமே துஞ்சும் நள்ளிரவிலும் என்னைத் துயிலவிடாது
,எனது நெஞ்சத்தை அலைக்கழித்து ஆட்சி செய்கின்றது.
“தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர்
ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறைமயக் குற்ற ஊர்துஞ்சு யாமத்து
நடுங்குபிணி நலிய நல்லெழில் சாஅய்த்
துனிகூர் மனத்தள் முனிபடர் உழக்கும்
பணைத்தோள் அரும்பிய சுணங்கிற் கணைக்கால்
குவளை நாறுங் கூந்தல் தேமொழி
இவளின்…………………” ---நற்றிணை.
குளிர்ந்த புனத்தில் உள்ள கருங்காக்கைகளின் கண்போன்ற
கரிய மலர் வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலி போல ஆட, விடாது மழைத் தூவல் பொருந்திய ஊர்முழுதும் உறங்கும்
நடுயாமத்து, நடுகுகின்ற காமநோய் வருத்தம் செய்தலாலே, நல்ல அழகு இழந்து, துன்பமிக்க மனத்தளாய்த் தன்னைச் சினந்து
ஒறுக்கும் காமநோயால் உழக்கின்ற பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய பசலையும் திரண்ட
தண்டை உடைய குவளை மலர் மணம் வீசும் கூந்தலையும் இனிய சொல்லையும் உடைய இவளின்…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக