திருக்குறள்
-சிறப்புரை
:1233
தணந்தமை
சால
அறிவிப்ப
போலும்
மணந்தநாள்
வீங்கிய
தோள். ----- க ௨ ௩ ௩
தலைவனோடு கூடி மகிழ்ந்த காலத்தில் பொலிவுபெற்றுப்
பெருத்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையை உணர்த்துவன
போல மெலிந்து தோன்றுகின்றன.
“ புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கன்
கண்டனமன் எம்கண்ணே அவன் சொல்
கேட்டனமன் எம்செவியே மற்று அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
நணப்பின் ஞெகிழ்ப எம்தடமென் தோளே.” ----குறுந்தொகை.
தோழி..!
கடற்கரைச்சோலையில், புணர்தற்குரிய குறியிடம் வாய்க்கப்பெற்ற
காலத்தில், எம் கண்கள் தலைவனைப் பார்த்தன; என் செவிகள் அவன் உரைத்த மொழிகளைக் கேட்டன; என்னுடைய
பருத்த மென்மையான தோள்கள் என்னைப் புணர்ந்தவழி மாட்சிமை உடைய நன்மையைப் பெற்றன; அவன் என்னைப் பிரிந்தவழி மெலிகின்றனவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக