திருக்குறள்
-சிறப்புரை
:1262
இலங்கிழாய்
இன்று
மறப்பினென்
தோள்மேல்
கலங்கழியும்
காரிகை
நீத்து. ------ க ௨ ௬ ௨
தோழி..!
பிரிந்துசென்ற தலைவரை இன்று, யான் மறப்பேனாயின்,
என் அழகு அழிய; தோள்கள் மெலிய; வளைகள் கையைவிட்டுக் கழன்றோடும் அன்றோ…!
“ பெய்பனி நலிய உய்தல் செல்லாது
குருகினம் நரலும் பிரிவு அருங்காலை
துறந்து அமைகல்லார் காதலர்
மறந்து அமைகல்லாது என் மடம்கெழு நெஞ்சே.” –ஐங்குறுநூறு.
தொடர்ந்து பெய்யும் பனி வருத்துவதால் உய்யும் வழி
காணாது, குருகினம் ஒலி செய்கின்ற,
பிரிதற்கு அரிய பருவத்தில் காதலர் நம்மைப் பிரிந்து தங்குதலை ஆற்றார்
ஆயின், என் அறியாமை மிக்க நெஞ்சம் அவரை மறந்து ஒருபோதும் வாழ்தல்
அமையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக