திருக்குறள்
-சிறப்புரை
:1256
செற்றவர்
பின்சேறல்
வேண்டி
அளித்தரோ
எற்றென்னை
உற்ற
துயர். ---- க ௨ ௫ ௬
யான் வருந்தவும் என்னைவிட்டுப்பிரிந்த சென்ற காதலரை
நாடி அவர் பின்னேசென்று சேர விரும்புவதால்,
எனக்கு உற்ற இக்காமநோயானது எத்தன்மை உடையது,..? மிகவும் இரங்கத்தக்கதே.
”மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர்
தழீஇய
துணங்கையானும்
யாண்டும்
காணேன்
மாண்
தக்கோனை
யானும்
ஓர்
ஆடுகள
மக்களே
என்கைக்
கோடு
ஈர்
இலங்குவளை
நெகிழ்த்த
பீடுகெழு
குரிசிலும்
ஓர்
ஆடுகள
மகனே.” ---குறுந்தொகை.
மாட்சிமை
பொருந்திய
என் தலைவனை, வீரர்கள்
கூடி எடுக்கும்
விழாவின்கண்ணும்
மகளிர் தத்தமக்குரிய
மள்ளரைத்
தழுவியாடுகின்ற
துணங்கைக்
கூத்தின்கண்ணும், இவையல்லாத
பிறவிடத்தும்
தேடியும்
காணக் கிடைத்திலேன். யானும் ஆடுகளத்திற்குரிய
ஒரு மகளே, என் கையிலுள்ள சங்கறுத்துச் செய்யப்பட்ட
வளையள்களை
நெகிழச் செய்த, பெருமை பொருந்திய
தலைவனும்
ஆடுகளத்தில்
உள்ள ஒருவனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக