திருக்குறள்
-சிறப்புரை
:1291
130. நெஞ்சொடு புலத்தல்
அவர்நெஞ்சு
அவர்க்காதல்
கண்டும்
எவன்நெஞ்சே
நீ
எமக்கு
ஆகா
தது ---- க ௨ ௯க
நெஞ்சே..! அவர் நெஞ்சம் அவரோடு பொருந்தி,
நம்மை நினைக்காதிருக்கும்போது, நீ மட்டும் என்னோடு
பொருந்தாது அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே ..! யாது கருதினை..?
“அம்மவாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடை
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.” ----ஐங்குறுநூறு.
வாழி தோழி..!
சிறிய இலைகளைக் கொண்ட நெல்லி மரங்கள் அடர்ந்து வளர்ந்த, கற்கள் வெயிலால் சூடேறிக் கிடக்கும் காட்டில், அறியாமை
மிக்க என் நெஞ்சம் அவரைப் பின் தொடர, பல இதழ்களால் அழகுபெற்ற
நீல மலர் போலும் மையுண்ட என் கண்கள் அழுமாறு பிரிந்த நம் காதலர் மெய்யாகவே கல்லைக்
காட்டினும் வலிய நெஞ்சம் படைத்தவராவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக