திங்கள், 20 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1270


திருக்குறள் -சிறப்புரை :1270

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.---- ௨ ௭0

எம் பிரிவைத் தாங்கமாட்டாது தலைவி  மனமுடைந்து இறந்துபட்டால், போர்க்களத்தில் வெற்றி பெறுவோம் என்பதனாலும் ;பெற்றுவிட்டோம் என்பதனாலும்; பெற்றுவிட்டோம் என்பதனாலும் ஒரு பொருளும் இல்லையே..!

சேயாறு செல்வாம் ஆயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்புகண் உடைய ஏகி கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே.” ---குறுந்தொகை.

நெடிந்தொலைவாகிய வழியைக் கடந்து செல்வோமாயின், பருத்த தோள்களையுடைய தலைவிக்கு இடர் ஏதும் இல்லாமல் காம நோயை நீக்க மாட்டேன் என்று, இருவர்க்கும் நன்மையை விரும்பி, ஆராய்ந்த மனத்தை உடையை ஆகிப் பரற்கற்களையுடைய மேட்டு நிலம் உடையும்படிக் குதிரையைச் செலுத்திச் சென்று, கரம்பு நிலத்தில் புதிய வழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே, பிரிவு நோயினால் வருந்தியும் குறித்த பருவத்தில் வருவான் என எண்ணி என்னை எதிநோக்கி வாழ்பவளை இறந்துபடாமல் தடுத்தற்குக் காரணமாய் இருத்தலான்,இன்றைக்குத் தேர் ஒன்றுதானா நீ, இங்குக் கொணர்ந்து தந்தனை.(என் உயிரையும் தந்தனை..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக