வியாழன், 23 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1275


திருக்குறள் -சிறப்புரை :1275

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. ----   ௨ ௭ ௫

நெருங்கிய வளையல்களை அணிந்த இப்பெண்ணின் மனத்திற் மறைத்து வைத்திருக்கின்ற குறிப்பு ஒன்று எனது வேட்கைத் துன்பத்தினை தீர்க்கும் மருந்தைக் கொண்டுள்ளது.

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.” ---குறுந்தொகை.

மார்பில் தோன்றிய சுணங்கினையும் அழகிய பருத்த இளமையுடைய முலையினையும் பெரிய தோளினையும் நுண்ணிய இடையையும் உடைய, கற்கள் பொருந்திய கானவர் நல்கிய மகள். பிரிந்துபோய் தேடிய பொருளால் அறம் செய்து, அவ்வுலகில் துய்ப்பது மருந்து என்றால் இவளே அம்மருந்து ஆவாள் ; அப்பொருளினால் இவ்வுலகில் துய்ப்பது செல்வம் என்றால், இவளே அச்செல்வம் ஆவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக