வெள்ளி, 17 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1264


திருக்குறள் -சிறப்புரை :1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.----- ௨ ௬ ௩

என்னைக் கூடிக்களித்துப் பிரிந்துசென்ற தலைவரது வருகையை, எதிர்நோக்கிய நெஞ்சம், மரத்தின் கிளைதோறும் ஏறிப் பார்க்கும்.

வண்டு தாது ஊத தேரை தெவிட்ட
தண்கமழ் புறவின் முல்லை மலர
இன்புறுத்தன்று பொழுதே
நின் குறி வாய்த்தனம் தீர்க இனிப் படரே.” ---ஐங்குறுநூறு

வண்டுகள் பூந்தாதினை உண்டு மகிழ ; தேரைகள் ஆரவாரிக்க ; தண்ணிய நறுமணம் வீசும் புறவினிடத்து முல்லை மலர ; இஃது இன்பமூட்டுகின்ற காலம். அரிவையே...! நினது குறிப்பு வாய்க்கப் பெற்றனம் ஆதலின்,இனித் துன்பம் நீங்கி இன்புறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக