வெள்ளி, 10 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1249


திருக்குறள் -சிறப்புரை :1249

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு.---- ௨ ௪௯

நெஞ்சே…! காதலர் எம் நெஞ்சில் நிறைந்துள்ளார் ; அவரை நினைத்து நீ யாரிடம் செல்கின்றாய்…?

நல் உரை இகந்து புல் உரை தாஅய்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவாவுற்றனை நெஞ்சே…..” ---குறுந்தொகை.

நெஞ்சே…! நன்மைதரும் இனிய மொழிகளின் நீங்கிப்புல்லிய பழிச் சொற்கள் பரவி, மழை நீரை ஏற்றுக்கொண்ட சுடப்படாத பச்சை மண்ணாலாகிய பாண்டத்தைப் போல,உள்ளத்தினால் தாங்க இயலாத துன்ப வெள்ளத்தில் நீந்தி, பெறுதற்கரிய ஒன்றனைப் பெற விரும்பினாய்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக