திருக்குறள்
-சிறப்புரை
:1289
மலரினும்
மெல்லிது
காமம்
சிலரதன்
செவ்வி
தலைப்படு
வார்.---- க ௨ ௮ ௯
மலரினும் மென்மைத்தன்மை வாய்ந்த காம இன்பத்தின்
இயல்பறிந்து, அவ்வின்பத்தைத் துய்ப்போர் சிலரேயாவர்.
“பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
நல்லகம் சேரின் ஒரு மருங்கினமே.” ----குறுந்தொகை.
பொய்கையில் உள்ள ஆம்பலின், அழகிய நிறத்தையுடைய கொழுவிய முகையானது வண்டுகளுக்குத்
தன்னுடைய இதழ்களாகிய வாயைத் திறக்கும். இத்தகைய தண்ணிய நீர்த்
துறையையுடைய தலைவனொடு, புணராது ஊரில் இருத்தலைச் செய்தால்,
நாங்கள் இரு வடிவினை உடையவர்கள் ஆவேம். துயிலிடத்தின்கண் அவ்வூரனுடைய நல்ல
மார்பினைச் சேர்ந்து அணைத்தால் வில்லைத் தம்முன்னே அகப்படுத்திய விரல்களைப்போல,
இருவரும் ஒரு வடிவினம் ஆவேம்.
அருமை ஐயா. தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்கு